×

உதவிப்பேராசிரியர்கள் நியமனம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித்தேர்வு: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு நடத்த வேண்டும் என பாமக தலைவர்அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு:  அரசு கல்லூரிகளுக்கு 4,000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில், அதில் 50% தங்களுக்கு ஒதுக்க வேண்டும் அல்லது சிறப்பு போட்டித் தேர்வு நடத்தி தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 5303 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் உழைப்பும், சேவையும் மதிக்கப்பட வேண்டும். உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்திற்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அறிவித்திருக்கிறது. ஆனால், இதனால் கவுரவ விரிவுரையாளர்களுக்கு போதிய அளவில் பயன் கிடைக்காது என்று கூறப்படுகிறது.



Tags : BAMA ,President ,Anbumani , Assistant Professor, Appointed, Honorary Lecturer, Special Competitive Examination, BAMA President, Anbumani, Emphasis
× RELATED என்எல்சி பிரச்னை, 10.5% இடஒதுக்கீட்டை...