×

என்.ஆர்.ஐ ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை மருத்துவ மேல்படிப்புக்காக விண்ணப்பிக்கும் அனைவரின் சான்றுகளை சரிபார்க்கவேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த கிரீஷ்மா கோபால், ரோஹன் மகேஷ் உள்பட ஏழு பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியலை தேர்வுக்குழு வெளியிட்டது. இந்த பட்டியலை ரத்து செய்து, தங்களை கலந்தாய்வில் அனுமதித்து மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு வழங்கக் கோரி ஏழு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான் என்று அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அளித்த வெளிநாடு வாழ் இந்தியர் என்ற சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டதாலும், குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெறாததாலும் இவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்வுக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ்இதைக்கேட்ட நீதிபதி, வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களும் சரி பார்க்கப்பட்டனவா என்று கேட்டார். அதற்கு தேர்வு குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்கள் ஏழு பேரின் சான்றுகள் மட்டும் சரிபார்க்கப்பட்டன என்று தெரிவித்தார்.

 இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அடுத்த கல்வியாண்டு முதல் வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் வெளிநாடு வாழ் இந்தியர் சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து மருத்துவ மேற்படிப்புக்கான தேர்வு குழு சரி பார்க்க வேண்டும். போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்கலாம்.  அதே சமயம் மேலும் 2 சேர்த்து கலந்தாய்வு நடத்தி தகுதியுள்ளவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தேர்வு குழு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறுதிகட்ட கலந்தாய்வை நடத்தலாம். மனுதாரர்கள் இருவரில் ஒருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துவிட்டார். மீதமுள்ள ஒருவரை கலந்தாய்வில் அனுமதித்து சேர்க்கை வழங்குவது குறித்து அரசே முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டனர்.


Tags : NRI ,ICourt , NRI Allotment, Admission, Medical Posture, Certificate, Verification, Court Order
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...