விமானத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை அணியாதவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசி மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் பெருமளவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். விமான பயணத்தின்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், விமான பயணத்தின்போது முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று அறிவித்து உள்ளது.

Related Stories: