முதல்வர் குறித்து அவதூறு பேச்சு திருவாரூர் மாவட்ட பாஜ நிர்வாகி கைது

மன்னார்குடி: முதல்வர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக திருவாரூர் மாவட்ட பாஜ நிர்வாகி நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். பால் விலை உயர்வை கண்டித்து பாஜ சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டையில் ஒன்றிய கவுன்சிலர் செல்வம்  தலைமையில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜ பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இது தொடர்பாக திமுக கிளை செயலாளர் கதிரவன், பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வக்கீல் செந்தமிழ்ச்செல்வனை (37) நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.

Related Stories: