அமெரிக்காவில் 2024ல் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 2024ல் நடக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபைகளில் அதிக இடங்களை முன்னாள் அதிபர் டிரம்ப் கட்சியான குடியரசு கட்சி பெற்றுள்ளது. செனட் சபைகளில் அதிபர் பைடனின் ஜனநாயக கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது. மக்களிடம் இன்னும் ஆதரவு இருப்பதால், வரும் 2024ம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் களமிறங்க திட்டமிட்டு இருந்தார்.

புளோரிடாவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொண்டு பேசுகையில், ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்த மற்றும் புகழ்பெற்றதாக மாற்றுவதற்காக, நான் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவேன். இது முழுக்க முழுக்க எங்கள் பிரச்சாரமாக இருக்கும். நான் உங்கள் குரல். 2024ல் அதிபர் பைடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன். நாங்கள் உயர்ந்த இலக்குகளை அடைந்து, நம் நாட்டை முன்பை விட பெரியதாக மாற்றும் வரை நாங்கள் வெளியேற மாட்டோம். சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டன’’ என்று தெரிவித்தார்.

* பைடன் பதிலடி

டிரம்ப்பின் பேச்சுக்கு பதிலடியாக அதிபர் பைடன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘டிரம்ப் அமெரிக்காவை தோல்வி அடைய வைத்தார். ஜனவரி 6, 2021 அன்று நடந்த அமெரிக்க கேபிடல் தாக்குதலில் டிரம்ப், தீவிரவாதிகள் மற்றும் வன்முறை கும்பலை தூண்டினார், பெண்கள் உரிமைகளைத் தாக்கினார்’ என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories: