எலான் மஸ்க் சூசகம் டிவிட்டரில் ப்ளு டிக் 29ல் மீண்டும் அமல்

நியூயார்க்: டிவிட்டரில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் குறியீட்டிற்கு இனி மாதம் ரூ.719 கட்டணம் செலுத்த வேண்டும் என டிவிட்டர் நிறுவன அதிபர் எலான்  மஸ்க் சமீபத்தில் அறிவித்தார். மாத கட்டணம் செலுத்திய அனைத்து கணக்குகளுக்கும் ப்ளூ டிக் வழங்கப்பட்டதால் பல போலி கணக்குகள் ப்ளூ டிக் பெற்று பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ப்ளூ டிக் கட்டண சேவை கடந்த வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், எலான் மஸ்க் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘‘ஒரு சில மாதங்களில் கட்டணம் செலுத்தாத அனைத்து ப்ளூ டிக் குறியீடுகளும் நீக்கப்படும்’’ என தெரிவித்து உள்ளார்.

இதற்கு என்ன பொருள் எனில், இதற்கு முன்பு புளூ டிக் வசதி பெற்றவர்கள், அதனை தொடர்ந்து நீடிக்க செய்ய அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். புது அறிவிப்பின் இடையே, யாரேனும் தங்களது டிவிட்டரின் அதிகாரப்பூர்வ பெயரை மாற்ற முற்பட்டால், அது புளூ டிக் இழப்புக்கு வழிவகுக்கும். அந்த பெயரை டிவிட்டர் நிறுவனம், சேவை விதிகளுக்கு உட்பட்டு உறுதி செய்யும் வரை பெயரை பெற முடியாமல் இழக்க நேரிடும் என்றும் மஸ்க் கூறியுள்ளார். புளூ டிக் கட்டண சேவை வரும் 29ம்தேதி மீண்டும் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

* ஊழியர்களுக்கு கெடு

இன்னொரு பதிவில், டிவிட்டரில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றுவது குறித்து உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும். இதற்கான லிங்க் ஊழியர்களுக்கு இமெயிலில் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து பணியாற்ற விரும்புவர்கள் லிங்க்கில் ஆம் என்பதை கிளிக் செய்ய  வேண்டும் என்று  மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: