×

உடன்குடியில் வாகன சோதனை காரில் கடத்திய ரூ. 11 கோடி அம்பர் கிரிஸ் பறிமுதல்

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் தனிப்படை போலீசார், உடன்குடி வில்லிகுடியிருப்பு பகுதியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி  விசாரித்த போது, அதிலிருந்தவர்கள் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே இருக்கன்துறையைச் சேர்ந்த ததேயூஸ் பெனிற்றோ (42), கூடங்குளம்  பெருமணலைச் சேர்ந்த அருள் ஆல்வின் (40), ராதாபுரம் செட்டிகுளம் வேணுகோபால் (35) என்பதும் காரில் மூன்று பிளாஸ்டிக் கவரில் 11 கிலோ திமிலங்கல எச்சமான அம்பர் கிரிஸ் இருப்பதும் தெரியவந்தது.

இந்த அம்பர் கிரிஸ் வாசனைத் திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதை சேகரிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 11 கிலோ 125 கிராம் எடையுள்ள அம்பர்கிரிஸ் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.   பின்னர்  திருச்செந்தூர் வனத்துறை அதிகாரியிடம் அம்பர்கிரிஸ் மற்றும் அதை கடத்திய மூவரையும் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த அம்பர் கிரிஸின் மதிப்பு ரூ.11 கோடி என போலீசார் தெரிவித்தனர்.


Tags : Ebengudi ,Gris , Udegudi, vehicle inspection, Rs. 11 crore Amber Kris, confiscated
× RELATED மோடி தலைமையிலான பாஜ அரசை வீட்டுக்கு...