சென்னை அருகே குளத்தில் ஆக்கிரமிப்புகள் கடைகள் அதிரடி அகற்றம்

புழல்: சென்னை அருகே மூன்று ஏக்கர் பரப்பளவு குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன. சென்னை புழல் அடுத்த புத்தாகரம் கடப்பா சாலையில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் பரப்பன்குளம் உள்ளது. இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டப்பட்டு இருந்தன. சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அதிகாரி முருகன் தலைமையில் நேற்று குளத்தை ஆய்தனர். பிறகு, மண்டல பொறியாளர்கள் சுந்தரேசன், சின்னதுரை முன்னிலையில் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. தொடர்ந்து, இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது. யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது, அசம்பாவிதம் நடக்காமல் இருக்க புழல் போலீஸ் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: