×

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் நேற்று சிறைபிடித்து சென்றனர். புதுச்சேரி, காரைக்கால் கடற்கரையில் இருந்து நேற்று காலை ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று இரவு பாக் ஜலசந்தி மற்றும் வங்கக் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த 14 மீனவர்களை படகுடன் சிறைபிடித்தனர்.

இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட மீனவர்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர் என தெரிகிறது. நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Sri Lankan Navy ,Tamilnadu , Sri Lankan Navy, atrocities, Tamil Nadu fishermen, 14 captives
× RELATED 3 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்