×

வடசென்னை 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அத்திப்பட்டில்  வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், 2வது நிலையில் உள்ள 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட், 1வது நிலையில் உள்ள 3வது அலகில் நிலக்கரி துகளாக்கும் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 210 மெகாவாட் என 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது நீக்கும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : North Chennai , Chennai-Andaman flight on 18th is cancelled
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...