சென்னை-அந்தமான் விமானம் 18ம் தேதி வரை ரத்து

சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்கள் வீதம், நாள் ஒன்றுக்கு சென்னை- அந்தமான் - சென்னை இடையே 14 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. அந்தமான் சிறந்த சுற்றுலாத்தளமாக இருப்பதாலும், அந்தமானில் தமிழர்கள் அதிக அளவில் வசிப்பதாலும், அந்தமான் விமானங்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும். அந்தமானில் பகல் 3 மணியிலிருந்து தரைக்காற்று வீசத் தொடங்கிவிடும். அப்போது அங்கு விமானங்களை இயக்க முடியாது. இதனால் அந்தமானில் விமான சேவை என்பது அதிகாலையில் முதல் பிற்பகல் வரை மட்டுமே.

இந்நிலையில் பல்வேறு காரணங்களுக்காக 1 தேதியிலிருந்து, 5ம் தேதி வரை அந்தமான் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நோயாளிகள், வர்த்தகர்கள், சுற்றுலாவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின்பு, இம்மாதம் 5ம் தேதியிலிருந்து அந்தமானுக்கு மீண்டும் விமான சேவைகள் தொடங்கின. இந்நிலையில் தற்போது திடீரென 15ம் தேதியிலிருந்து, 18ம் தேதி வரை, மீண்டும் அந்தமானுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரே மாதத்தில் இரண்டுமுறை, 8 நாட்கள் அந்தமானுக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: