தென்னிந்திய விமான நிலையங்களுக்கான புதிய இயக்குனர் நியமனம்

சென்னை:  சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் இந்திய விமான நிலையங்களின் செயல் இயக்குநராக எஸ்.ஜி.பணிக்கர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும், தென்னிந்திய விமான நிலையங்களின் செயல் இயக்குனராக, எஸ்.ஜி.பணிக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த எஸ்.ஜி.பணிக்கர், ஏற்கனவே  வடகிழக்கு மாநிலங்களின் விமானநிலையங்களின் செயல் இயக்குனராக பணியாற்றிவந்தார். எஸ்.ஜி.பணிக்கர், தற்போது சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள, தென்னிந்திய விமான நிலையங்களின் தலைமையகத்திற்கு, செயல் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

ஏற்கனவே இந்த பதவியில் இருந்த மாதவன் கடந்த ஜூலை மாதம் பணியிலிருந்து  ஓய்வுபெற்றார். இப்போது தென் இந்திய விமான நிலையங்களின் செயல் இயக்குநரான பணிக்கர் கட்டுப்பாட்டில், தமிழ்நாடு, (சென்னை விமான நிலையம் நீங்கலாக) ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்பட  மாநிலங்களில் உள்ள 26 விமான நிலையங்கள் உள்ளன.

Related Stories: