பிரபலமான ஊர்களில் விற்கும் ஸ்பெஷல் உணவுகளை பயணிகள் பெறும் வசதி: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: ரயில் பயணத்தின் போது பிரபலமான ஊர்களில் கிடைக்கும் ஸ்பெஷல் உணவுகளை பயணிகள் விருப்பத்துக்கு ஏற்ப ஆர்டர் செய்து வாங்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரயிலில் உணவு விநியோக சேவையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகள், பருவகால உணவு வகைகள், பண்டிகை கால உணவுகள் என பல்வேறு தொகுப்பு உணவுகளை ஐஆர்சிடிசியின் இணையதளம் அல்லது செயலி வாயிலாக பெறலாம். வெளியூர் பயணத்தின்போது, ஆங்காங்கே பிரபலமான உணவுகளை பெறும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.

பயணிகள் தாங்கள் விரும்பும் உணவுகளை ஐ.ஆர்.சி.டி.சி.மூலமாக ஆர்டர் செய்யலாம். குழந்தைகள், சர்க்கரை நோயாளிகளுக்கு என பல்வேறு பிரத்யேகதொகுப்பு உணவுகளையும் பெறலாம்சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு, சிறு தானிய அடிப்படையிலான உள்ளூர் தயாரிப்புகள் உள்ளிட்ட ஆரோக்கியம் சார்ந்த உணவு என பயணிகள் தாங்கள் விரும்பிய உணவுகளை தேர்வு செய்யலாம். சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில் பயணிகளுக்கான கட்டணத்தில் உணவுக்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், முன்கூட்டியே உணவுக்கான கட்டணம் செலுத்தியும் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: