×

தான்சானியாவிலிருந்து கொண்டைக்கடலை இறக்குமதியில் மோசடி 27 ஆயிரம் டாலர் லஞ்சம் பெற்றவர் முன்ஜாமீன் மனு: போலீஸ் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தான்சானியாவிலிருந்து கொண்டைக்கடலை மற்றும் முந்திரி பருப்பு இறக்குதி செய்ய லஞ்சம் பெற்றவர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது பாதிக்கப்பட்டவர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை வானகரத்தை சேர்ந்த அன்சியோ இந்தியா என்ற தனியார் நிறுவனம் தான்சானியாவிலிருந்து கொண்டைக்கடலை மற்றும் முந்திரி பருப்பு இறக்குமதி செய்வதற்காக சாய் சூர்யா ஏற்றுமதி நிறுவனத்திடம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் அமெரிக்க டாலர்களுக்காக தொகையை வங்கி மூலம் பண பரிமாற்றம் செய்தது. பணப் பரிமாற்றம் செய்யப்பட்டும் பொருட்கள் வராதால் அன்சியோ நிறுவனம் தரப்பில் சென்னை காவல் துறையில் புகார் அளித்தது.

அந்த புகாரில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டபோது தங்கள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த எஸ்.ஆர்.ராமசுப்பிரமணியன் என்பவர் சாய் சூர்யா நிறுவனத்திடம் 26,866 அமெரிக்க டாலரை லஞ்சமாக பெற்றதாக கூறப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், ராமசுப்பிரமணியன், சாய் சூர்யா நிறுவனத்தை சேர்ந்த சரவணன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராமசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து அன்சியோ நிறுவனம் தரப்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுக்களுக்கு போலீஸ் தரப்பில் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Tags : Tanzania ,High Court , Anticipatory bail plea for 27,000 dollar bribe taker in chickpea import fraud from Tanzania: High Court orders police response
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...