விமானத்தில் பயணிகள் இனிமேல் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை: விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: விமானத்தில் பயணிகள் இனிமேல் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களில் கட்டாய முகக் கவச உத்தரவு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச, உள்ளூர் விமானங்களிலும் கட்டாய முகக்கவச உத்தரவு தளர்த்தப்படுவதாகவும் மற்றும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும் விமானப்போக்குவரத்து அமைச்சகம்அறிவித்துள்ளது.

அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிவது விரும்பத்தக்கது என்று மட்டுமே அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அனைத்து பயணிகளும் முகக் கவசங்களைப் பயன்படுத்துவது சிறந்தது எனவும் விமான போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: