×

சென்னையில் ம.நீ.ம மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!: நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி பற்றி கட்சி நிர்வாகிகளுடன் விவாதம் மேற்கொண்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். மக்கள் நீதி மய்ய கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணாநகரில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதத்தில், கட்சி செயல்படுத்தி இருக்கும் திட்டங்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை உள்ளிட்ட நிகழ்வுகளுடன் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், கூட்டம் தொடங்கிய நிலையில், கட்சியினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார். இதனிடையே செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், கூட்டணி பற்றி ஆலோசனைகள் மேற்கொண்டதாகவும், ஆனால் அதனை பொதுவெளியில் விவரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.


Tags : M.N.M ,Chennai ,Kamal Haasan , Chennai, Madhya Pradesh, Parliamentary Elections, Kamal Advice
× RELATED ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட...