×

அம்பத்தூரில் ரூ.12.39 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு

அம்பத்தூர்: அம்பத்தூரில் ரூ.12.39 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சென்னை அம்பத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான இடவசதியில்லாததால், அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. பழைய கட்டிடத்தில் நீதிமன்றம் இயங்கி வந்ததால் புதிய கட்டிடம் கட்டிதரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில்  அம்பத்தூரில் பழைய இடத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து  2019ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி அப்போதைய

மாவட்ட நீதிபதி ஜெ.செல்வநாதனால் அடிக்கல் நாட்டப்பட்டுபணி நடந்து வந்தது.
இதில், 1.46 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடியே 38 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பீட்டில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதி மன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் விரைவு நீதி மன்றங்கள் தனித்தனியாக குளிர்சாதன வசதியுடன் பிரத்யேகமாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்  நீதிபதிகளுக்கு தனி மின் தூக்கி, 400 வழக்கறிஞர்கள் வழக்காடும் வகையில் அறைகள்,  காவலர்களுக்கான ஓய்வறை, பார்வையாளர்களான ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி  கழிப்பறை வசதி, கைதிகளை அமர வைக்க தனி அறை, அரசு துறை அலுவலர்களுக்கு தனித்தனி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில்  சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா கலந்துகொண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதியரசர்  குடியிருப்பு ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து  வைத்தார். நிகழ்ச்சியில், சட்டத்துறை மற்றும் நீதி நிர்வாக  சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  மற்றும் மாவட்ட நீதிபதி செல்வசுந்தரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Ambattur , 12.39 crore integrated court opening in Ambattur
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...