ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: கர்நாடக கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெங்களூருவிவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஜெ.விடம் பறிமுதல் செய்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர ஆபரணங்கள், 11,244 பட்டுச் சேலைகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள், வைக்கப்பட்டுள்ளன. 26 ஆண்டுகளாக கருவூலத்தில் உள்ள பொருட்கள் சேதமடையக் கூடும் என்பதால் அவற்றை ஏலம் விடக்கோரி தகவல் அறியும் ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் அனுப்பிய மனுவை உச்சநீதிமன்றம் வழக்காக எடுத்து விசாரித்தது. நரசிம்ம மூர்த்தி மனு மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: