இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் நிலநடுக்கம்

சுமத்ரா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் தென்மேற்கில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறும் நிலையில், சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன். இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Related Stories: