×

சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் 1.06 லட்சம் பேருக்கு மழை நிவாரணம்: அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த வேம்பகுடி, வேட்டங்குடி, இருவக்கொல்லை பகுதிகளில் மழை பாதிப்புகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: கொள்ளிடம் ஒன்றியத்தின் கிழக்கு பகுதி, சீர்காழி ஒன்றிய கிழக்கு பகுதி, கடற்கரையோர கிராமங்களில் மழைநீர் சூழ்ந்திருக்கிறது. முகாம்களில் பொதுமக்களை தங்க வைத்து உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலை திரும்பி வருகிறது.

கொள்ளிடத்தில் 10,000 ஹெக்டேர், சீர்காழியில் 10,500 ஹெக்டேர், செம்பனார்கோயிலில் 9,552 ஹெக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மழையால் பாதித்த மக்களுக்கு 6 நாட்களுக்குள் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி சீர்காழி, தரங்கம்பாடியை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் 1.06 லட்சம் பேருக்கு முதல்வர் அறிவித்த நிவாரணம் ரூ.1000 வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sirkazhi, Tharangambadi ,Minister ,Meiyanathan , Rain relief for 1.06 lakh people in Sirkazhi, Tharangambadi area: Minister Meiyanathan's announcement
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...