×

மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!!

கடலூர்: மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மயிலாடுதுறை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுக்கை கிராமத்தில் சுமார் 500 நபர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை, அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது பல்வேறு கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் வைத்தனர். அவர்கள் மத்தியில் பேசிய அவர், விவசாயிகளுக்காக அதிமுக எப்போதும் குரல் கொடுக்கும் என்று உறுதியளித்தார்.

சீர்காழி அருகே வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறாததால் 3 மணி நேரமாக வயலில் இறங்கி காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். நல்லூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள், வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்திருக்கின்றன. இவற்றை காண்பிக்க அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் காத்திருந்தனர். அவர்களை பார்க்காமல் சாலையில் நடந்து சென்று உப்பனாற்று பாலத்தில் நின்று தண்ணீர் ஓடுவதை மட்டும் எடப்பாடி பழனிசாமி பார்த்தார். இதனால் தங்களின் குறைகளை கேட்டறிவார் என்று ஆவலுடன் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Tags : Former ,Chief Minister ,Edappadi Palanisamy ,Mayiladuthur ,Cuddalore , Mayiladuthurai, rain, flood damage, Edappadi Palaniswami
× RELATED வேட்பாளர் தேர்வு செய்ய முடியாமல்...