திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நிரம்பி வழியும் ஏரியால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நிரம்பி கலங்கள் வழியாக வெளியேறி வரும் உபரி நீரை மலர் தூவி வரவேற்ற மக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அங்குள்ள ஏரிகள் நிரம்பியுள்ளன. தெள்ளூர் கிராமத்தில் 150 ஏக்கர் விவசாய நிலங்களும் பயனடையும் வகையில் அங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் நிரம்பி கலங்கள் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது.

இதனையறிந்து மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, மஞ்சள், பூ, வாழைப்பழம் உள்ளிட்ட சீர்வரிசையுடன் ஊர்வலமாக சென்று உபரிநீர் வெளியேறும் இடத்தில் மலர்கள் தூவி வரவேற்றனர். அப்போது அங்கு இருந்தவர்களுடன் இனிப்புகளையும் பரிமாறி கொண்டனர். ஏரி நிரம்பி வழிவதால் சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்களில் 3 போக நெல் விளைச்சலுக்கு இந்த நீர் போதுமானதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் செங்கூர் கிராமத்தில் உள்ள எரியும் நிரம்பி வழிவதால் கலங்கள் வழியாக நீர் ஆர்ப்பரித்து செல்கிறது.   

Related Stories: