×

கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்குத் தகுதியானவரைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், ஆவணங்கள் வரவேற்பு

சென்னை: கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்குத் தகுதியானவரைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள், அவை தொடர்பான ஆவணங்கள் வரவிக்கப்படுகின்றன.

மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோட்டை அமீரின் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.25,000க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். இப்பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. வரும் 26.01.2023 அன்று குடியரசு தின விழாவின்போது வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவரைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009, 15.12.2022-க்கு முன்பாக அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சரால் 26.01.2023 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவார்.

Tags : Applications and documents are welcome for shortlisting for Fort Amir Religious Harmony Medal
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...