×

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு

சென்னை : இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 60,000 பேர் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் பிரமாண்டமான தொழிற்சாலையை டாடா குழுமம் அமைக்கிறது. தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐ-போன் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை சீனாவில் மூடப்படும் நிலையில் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது.

ஐ-போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனமும் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேலும் 53,000 பேரை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஐ-போன் தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத்தியை 2 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

ஃபாக்ஸ்கான், ஃபெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் புதிய ஐ-போன்களை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூரில் அமையவுள்ள புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : India ,Osur , Announcement that the iPhone will be launched in the factory
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...