×

பயங்கரவாதிகள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தலை தடுக்க கடலோர பகுதிகளில் 2வது நாளாக தீவிர கண்காணிப்பு..!!

நாகை: தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 2வது நாளாக கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிக்க ஆண்டுதோறும் கடலோர பாதுகாப்பு குறித்த ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். தீவிரவாதிகளை கண்காணித்து அவர்கள் ஊடுருவாமல் தடுக்கவும், தங்கம், ஹெராயின், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கடத்துவதை தடுக்கவும் தமிழக கடற்கரையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி காவல்துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசார் மேற்கொண்டுள்ள  சி விஜில் 2022 ஆப்ரேஷன் பாதுகாப்பு என்ற பெயரில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டுள்ளனர்.

இன்று 2வது நாள் ஒத்திகை, நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில் நடைபெற்று வருகிறது. ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில், வேதாரண்யம் கடலோர காவல் குழும கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில், கடலோர பாதுகாப்பு பிரிவு போலீசார் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் சோதனை நடத்தினர். பின்னர் படகுகளில் சென்று பயங்கரவாதிகள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஒத்திகை செய்தனர். இதுபோல கோடியக்கரை, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்களிலும் போலீசார் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Terrorist Infiltration, Narcotics, Coastal Zone, Surveillance
× RELATED சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹1000...