×

தஞ்சையில் அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் மும்முரம்: மண்பாண்ட தொழிலுக்கு களிமண் எடுக்க அரசு உதவ கோரிக்கை

தஞ்சாவூர் : தஞ்சையில் அகல் விளக்கு தயாரிக்கும் தொழில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் தங்களுக்கு எளிதாக களிமண் கிடைக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூரில் உள்ள குயவர் தெருவில் கார்த்திகை தீப திருநாளுக்கான அகல் விளக்குகள் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த அகல் விளக்குகள் தலா ரூ.2 விலையில் விற்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள கலைஞர்கள் பானை, சட்டி உள்ளிட்ட மண் பாண்டங்களை அழகுற கலை நயத்துடன் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஏரி, குளங்களில் களிமண் இலவசமாக எடுத்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தாலும் களிமண் எடுக்க அனுமதிப்பதில்லை என்றும் தரமான மணலும் மற்ற பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்து விட்டதாகவும் கலைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, களிமண் எளிதாக கிடைத்திட அரசு உதவ வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, பீங்கானால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி அகல் விளக்குகளாலும் தங்களது பாரம்பரிய அகல் விளக்கு தொழில் பாதிக்கப்படுவதாகவும் அக்கலைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் பாரம்பரிய அகல் விளக்குகளை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.      


Tags : Thummuram Acal Lighting Manufacture ,Thanju , Tanjore, Agal, Lamp, Pottery, Industry, Government, Help, Request
× RELATED தஞ்சையில் சோகம்: இருசக்கர வாகனம் மீது...