×

உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச சட்ட விதிகள் மீறல்: ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்

நியூயார்க் : உக்ரைன் மீதான போரின் போது சர்வதேச சட்ட விதிமீறல் தொடர்பாக ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியுள்ள ரஷ்யா 9 மாதங்களாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா சர்வதேச விதிகளை மீறி செயல்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி ஐக்கிய நாட்டுகள் சபை கூட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய பல்வேறு நாடுகளின் பிரநிதிகள் உக்ரைனில் அரேங்கேற்றுப்பட்டு வரும் போர் குற்றங்கள் மற்றும் சேதங்களுக்கு ரஷ்யா பொறுப்பேற்று உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். விவாதத்தில் பேசிய ரஷ்ய தூதர் வாசிலி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 94 நாடுகள் ஆதரவாக வாக்களித்தனர். சீனா, பெலாரஸ், வடகொரியா, ஈரான், சிரியா, ரஷ்யா உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டுள்ளது.        


Tags : Ukraine ,UN , Ukraine, issue, rule, violation, Russia, UN, Council, resolution
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...