×

'தலித், பழங்குடியினர் உரிமைகள் பெறுவதை பாஜக விரும்பவில்லை': காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மும்பை: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள் பெறுவதை பாஜக விரும்பவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் யாத்திரையை தொடங்கிய ராகுல், இதுவரை 6 மாநிலங்களில் 28 மாவட்டங்களில் பயணத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிராவின், வாஷி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர், பிர்சா முண்டாவின் பிறந்தநாளை ஒட்டி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அரசியல் சாசனத்தை பாஜக தினமும் சிதைத்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். பழங்குடியினர் தான் நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் என்று கூறிய ராகுல் காந்தி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் தங்கள் உரிமைகளை பெறுவதை பாஜக விரும்பவில்லை என்று தெரிவித்தார். பிர்சா முண்டாவின் கொள்கைகளை நான்கு பக்கங்களில் இருந்து ஆர்.எஸ்.எஸ்., பாஜக தாக்கி வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.


Tags : BJP ,Dalits ,tribals ,Congress ,Rahul Gandhi , Dalit, Tribal, Rights, BJP, Rahul Gandhi
× RELATED மத்தியில் காங்கிரஸ் ஆட்சி...