×

நீர்வழித்தடங்கள் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 2.6 லட்சம் கொசு வலைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: நீர்வழித்தடங்கள் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 2.6 லட்சம் கொசு வலைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை - கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொசுவலை வழங்கிய பின்னர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,  தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 48,187 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக 55 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

76 லட்சம் பேர் மருத்துவ முகாம்களில் பங்கேற்று பரிசோதனை செய்துள்ளனர். சென்னையில் 3,562 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் தினமும் 90 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளன. கொசு மருந்து தெளிக்கும் பணியில் 3,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கரையோரம் வசிக்கும் மக்களுக்கு கொசுவலை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நீர்வழித்தடங்கள் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 2.6 லட்சம் கொசு வலைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கொசுக்களால் பரவும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், டெங்கு, மலேரியா பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மருத்துவ துறை குறையேதும் இல்லாத துறையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். தமிழகத்தில் 5 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என்று கூறினார். கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக மருத்துவ குழுவினர் அறிக்கை தருவர். பிரியா மரணத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Tags : Minister ,M.Subramanian , Waterway, people, mosquito nets, Minister M. Subramanian
× RELATED தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட,...