திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான அறைகள் முன்பதிவுக்கு இன்று ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு

திருமலை: திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கு அறைகள் முன்பதிவு செய்ய இன்று ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம், ஆர்ஜித சேவை உள்ளிட்ட டிக்கெட்  டிசம்பர் மாதத்திற்கு  ஆன்லைனில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த  பக்தர்களுக்காக திருமலையில் அறைகள்  முன்பதிவு செய்யும் விதமாக 16ம் தேதி (இன்று) மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் அறைகள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: