பணத்தை திருப்பி தருவதில் தாமதம் ஏர் இந்தியாவுக்கு ரூ. 985 கோடி பைன்: அமெரிக்கா அதிரடி

வாஷிங்டன்: டாடாவின் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு அமெரிக்கா ரூ. 985 கோடி அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவில் விமான டிக்கெட்களை ரத்து செய்த மற்றும் மாற்று விமானங்களில் பயணித்தவர்களுக்கான தொகையை திருப்பி அளிப்பதில் ஏர் இந்தியா நிறுவனம் கால தாமதம் செய்வதாக புகார் எழுந்தது.இதனைத் தொடர்ந்து, அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு செய்தபோது, ஏர் இந்தியாவின் ‘கோரிக்கையின் பேரில் பணத்தைத் திரும்பப் பெறுதல்’ கொள்கைக்கும் அமெரிக்க போக்குவரத்து துறையின் `விமான டிக்கெட்டை ரத்து செய்தாலோ அல்லது மாற்று விமானத்தில் பயணித்தாலோ டிக்கெட்டுகளை சட்டப்பூர்வமாகத் திரும்பப் பெற வேண்டும்,` என்ற கொள்கைக்கும் ஏராளமான முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்தது.

மேலும், இது தொடர்பாக போக்குவரத்து துறைக்கு வந்த 1,900 புகார்களில், 100 நாட்கள் நடவடிக்கைக்கு பின், அவற்றில் பாதி புகார்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பயணிகளுக்கு ரூ. 985.85 கோடியை திரும்பி கொடுக்கவும், அபராதமாக ரூ. 11.35 கோடி செலுத்தவும் ஏர் இந்தியாவுக்கு அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் டிக்கெட் ரத்து செய்தவர்களுக்கு ஏர் இந்தியா, அமெரிக்காவின் பிரன்டியர், போர்ச்சுகல், மெக்சிகோ, இஸ்ரேல், கொலம்பியா ஆகிய 6 நாடுகளின் விமான நிறுவனங்கள் ரூ.4.86 லட்சம் கோடி திரும்பி செலுத்த வேண்டியுள்ளது.

Related Stories: