×

சன்ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன் விடுவிப்பு

புதுடெல்லி: கொச்சியில் வரும் டிச. 23ம் தேதி ஐபிஎல் மினி ஏலம் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும்/ விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை தெரிவிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சன்ரைசர்ஸ் அணியில் இருந்து வில்லியம்சன் (நியூசி.), ஜெகதீஷா சுசித், ஷ்ரேயாஸ் கோபால், ரவிகுமார் சமர்த், சஷாங்க் சிங், சவுரவ் துபே, பிரியம் கார்க், ரொமாரியோ ஷெப்பர்டு, விஷ்ணு வினோத், நிகோலஸ் பூரன், ஷான் அபாட், சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அபிஷேக் ஷர்மா, மார்க்ரம், உம்ரான் மாலிக், கிளென் பிலிப்ஸ், புவனேஷ்வர் குமார், ராகுல் திரிபாதி, அப்துல் சமத், மார்கோ ஜான்சென், வாஷிங்டன் சுந்தர், கார்த்திக் தியாகி, டி.நடராஜன், பஸல்லாக் பாரூக்கி ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

பிராவோ இல்லை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ, கிறிஸ் ஜார்டன், ஆடம் மில்னே, என்.ஜெகதீசன், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, கே.எம்.ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கேப்டன் தோனி, ஜடேஜா உள்பட 18 வீரர்களை சிஎஸ்கே தக்கவைத்துள்ளது. போலார்டு ஓய்வு: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஆல் ரவுண்டர் கெய்ரன் போலார்டு (வெ.இண்டீஸ்) ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த சீசனில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். மெரிடித், சாம்ஸ், ஆலன், மில்ஸ், சஞ்சய் யாதவ், ஆர்யன் ஜுயல், மயாங்க். எம், முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, அன்மோல்பிரீத், உனத்கட், பாசில் தம்பி விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Williamson ,Sunrisers , Sunrisers team, Williamson, released
× RELATED சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மகேஷ் பாபு சந்திப்பு