இந்தியாவுடன் டி20, ஒருநாள் தொடர் நியூசிலாந்து அணியில் போல்ட், கப்தில் நீக்கம்

வெலிங்டன்: இந்திய அணியுடன் யி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்கள் டிரென்ட் போல்ட், மார்டின் கப்தில் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர்களுக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார். தொடக்க வீரர் மார்டின் கப்தில் (36 வயது), வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் (33 வயது) இருவரும் தேர்வு செய்யப்படவில்லை.

முதல் டி20 போட்டி வெலிங்டனில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. 2வது போட்டி மவுன்ட் மவுங்கானுயி (நவ. 20), 3வது டி20 நேப்பியரில் (நவ. 22) நடக்க உள்ளன. ஒருநாள் போட்டிகள் ஆக்லாந்து (நவ.25), ஹாமில்டன் (நவ.27), கிறைஸ்ட்சர்ச் (நவ.30) மைதானங்களில் நடைபெற உள்ளன.நியூசி. டி20 அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைகேல் பிரேஸ்வெல், டிவோன் கான்வே (கீப்பர்), லோக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ, ஈஷ் சோதி, பிளேர் டிக்னர். நியூசி. ஒருநாள் அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைகேல் பிரேஸ்வெல், டிவோன் கான்வே (கீப்பர்), லோக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ, டாம் லாதம் (கீப்பர்), மேட் ஹென்றி.

Related Stories: