தென்னிந்திய படங்களை கேலி செய்தார்கள்: யஷ் உருக்கம்

பெங்களூர்: தென்னிந்திய படங்களை கேலி செய்து வந்தார்கள். இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்றார் நடிகர் யஷ். கேஜிஎஃப் 2 படம்ரூ. 1200 கோடி வசூலித்து பெரும் சாதனை படைத்தது. இதையடுத்து யஷ் பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார். அவரை நடிக்க வைக்க பாலிவுட்டில் முயற்சி நடக்கிறது. ஆனால் அவர் எதற்கும் மசியவில்லை. கன்னட படத்தில் நடிக்கவே ஆர்வமாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் யஷ் பேசியது: 10 வருடங்களுக்கு முன் தென்னிந்திய படங்களை, வட இந்தியாவில் கேலி செய்வார்கள். பிறகு கலை வடிவத்தை புரிந்துகொள்ள தொடங்கினார்கள்.

தென்னிந்திய திரைப்படங்கள் மிகக் குறைந்த விலைக்கு அங்கு விற்கப்பட்டன. மோசமாக டப் செய்து, வேடிக்கையான பெயர்களுடன் வெளியிட்டார்கள். அதை ‘பாகுபலி; மூலம் மாற்றியவர் இயக்குனர் ராஜமவுலி. அவருக்கு நன்றி. நீங்கள் ஒரு பாறையை உடைக்க வேண்டும் என்றால், தொடர்ச்சியான முயற்சி தேவை. ‘பாகுபலி’ அந்த உத்வேகத்தை கொடுத்தது. ‘கே.ஜி.எஃப்’ வித்தியாசமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட படம். இப்போது வட இந்தியாவில் தென்னிந்திய படங்களைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ்வாறு யஷ் பேசினார்.

Related Stories: