நடிப்பிலிருந்து ஆமிர்கான் தற்காலிக ஓய்வு

மும்பை: நடிப்பிலிருந்து பாலிவுட் நடிகர் ஆமிர்கான் தற்காலிக ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். ஆமிர்கான் கடைசியாக நடித்த படம் லால் சிங் சட்டா. இந்த படம் கடந்த ஆகஸ்டில் வெளியானது. ஆனால் படு தோல்வி அடைந்தது. இதனால் ஆமிர்கான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் சாம்பியன்ஸ் என்ற ஸ்பானிஷ் படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது தனது முடிவிலிருந்து திடீரென அவர் மாறியிருக்கிறார். ஆமிர்கான் நடித்த படங்கள் அனைத்தும் தொடர் வெற்றிகளை பெற்று வந்தன. இந்நிலையில் லால் சிங் சட்டாவின் தோல்வியால் அவர் துவண்டு போயிருக்கிறார்.

நேற்று முன்தினம் டெல்லிக்கு வந்த ஆமிர்கான், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ‘சாம்பியன்ஸ்’ என்ற படத்தில் நடிக்க இருந்தேன். இப்போதைக்கு அந்த படத்தை தள்ளி வைத்திருக்கிறேன். சில காலம் எனது அம்மா, பிள்ளைகளுடன் நேரத்தை கழிக்க விரும்புகிறேன். கடந்த 35 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். இப்போது எனக்கு ஒரு பிரேக் தேவைப்படுகிறது. அதையடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவேன்’ என்றார்.

Related Stories: