போர்க்களமான சத்தியமூர்த்தி பவன் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்ட நெல்லை காங்கிரசார் மீது தாக்குதல்: காங்கிரசார் மண்டை உடைப்பு; ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 3 பேர் படுகாயம்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நெல்லை காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூனா கார்கே பொறுப்பேற்ற பின்பு தமிழக காஙகிரசை வலுத்தப்படுத்துவதற்காக என்னை மாற்றங்கள் கொண்டு வரலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக கே.எஸ்.அழகிரி மற்றும் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட தலைவர்கள் வந்தனர். அப்போது, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் என்று கூறப்படு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காங்கிரசார் ஏராளமான வாகனங்களில் சத்தியமூர்த்தி பவனில் காத்திருந்தனர். அவர்கள் திடீரென கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரையும், அவரால் நியமிக்கப்பட்ட 2 வட்டார தலைவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இதனால் சத்தியமூர்த்திபவனில் திடீரென பரபரப்பு நிலவியது. அவர்கள் தலைவர்களை அங்கிருந்து நகர விடாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறே இருந்தனர். மாவட்ட தலைவரை உடனடியாக மாற்றினால் தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கே.எஸ்.அழகிரியை ‘கேரோ’ செய்தனர். அவர் இந்த பிரச்னை குறித்து விசாரித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று அவர்களை சமாதானப்படுத்தினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து பிரச்னை செய்ததால் பரபரப்பு நிலவியது. இதனால் அங்கு பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, குறிப்பிட்ட 20 பேரை மட்டும் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்தார். அப்போது, முதலில் தங்களது ஆதரவாளர்களை உடனடியாக சத்திய மூர்த்திபவனில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். இதனால் ரூபி மனோகரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். அதுவும் தோல்வியில் முடிந்தால்,பலத்த பாதுகாப்புடன் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ,கே.எஸ்.அழகிரி சத்திய மூர்த்தி பவனில் இருந்து வெளியேறினார்.

அவர்கள் காரில் ஏற முயன்ற போது ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் திரண்டு நின்று காரை மறித்ததுடன், கட்சியின் கேட்டை அடைத்தனர். மேலும் செருப்புகளை அவர் கார் மீது வீசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் நுழைவு வாயிலை மூடிவிட்டு உள்ளே நின்று கொண்டு இருந்த ரூபி மனோகரனின் ஆதரவாளர்களை கடுமையாக தாக்கி, சிலரின் மண்டையை உடைத்தனர். இதனால் சத்திய மூர்த்தி பவன் வளாகமே போர்க்களமானது. இந்த மோதலில் ரூபி மனோகரனின் ஆதரவாளர்களான நெல்லையை சேர்ந்த டேனியல், ராபர்ட், ஜோசுவா ஆகிய மூன்று பேர் படும் காயமடைந்தனர். சிலரின் மண்டை உடைந்தது. அவர்களை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.

Related Stories: