×

இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா இடையே எல்லை பிரச்னை தொடர்பாக பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. எனினும் அங்கு தொடர்ந்து கடந்த 30 மாதங்களாக பதற்றம் தொடர்கிறது. இந்த சூழ்நிலையில் உத்தரகாண்டில் இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் இணைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இதுபோன்று கூட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாகும். நேற்று தொடங்கிய இந்த பயிற்சி டிசம்பர் முதல் வாரத்தில் முடிவடையும். இந்த கூட்டுப்பயிற்சியின்போது  இரு நாட்டு ராணுவ வீரர்களும் பொதுவான குறிக்கோளை அடைவதற்காக இணைந்து செயல்படுவார்கள். மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபடுவார்கள்.


Tags : India ,US , India-US joint military exercise
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...