×

ஆஜராகும் தேதி மாற்ற வேண்டும் முதல்வர் சோரன் கோரிக்கை அமலாக்கத் துறை நிராகரிப்பு

ராஞ்சி: சட்ட விரோத சுரங்க வழக்கில் ஒருநாள் முன்னதாக விசாரணைக்கு ஆஜராக அனுமதிக்கும்படி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விடுத்த வேண்டுகோளை அமலாக்கத்துறை நிராகரித்தது. ஜார்கண்ட் முதல்வர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ராஞ்சியில் சட்ட விரோதமாக சுரங்கங்களை குத்தகைக்கு விட்டதில் ரூ.1,000 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக சோரன் மீது பாஜ தலைவரும் முன்னாள் முதல்வருமான ரகுபர் தாஸ் குற்றம் சாட்டினார். இந்த வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத் துறை, ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கடந்த 3ம் தேதி ஹேமந்துக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், நாளை ஆஜராக கூறி கடந்த 11ம் தேதி அமலாக்கத் துறை அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியது. ஆனால், ஒருநாள் முன்னதாக, அதாவது இன்று ஆஜராகி விளக்கம் அளிப்பதாக அமலாக்கத்துறைக்கு அவர் தெரிவித்தார். இந்த கோரிக்கையை அமலாக்கத்துறை நிராகரித்துள்ளது.

Tags : Chief Minister ,Soren ,Enforcement Department , Chief Minister Soren's request to change the date of appearance was rejected by the Enforcement Department
× RELATED ஹேமந்த் சோரனுக்கு எதிராக டிவி, பிரிட்ஜ் வாங்கிய ரசீதை ஆதாரமாக காட்டிய ஈடி