×

காடுகளை பாதுகாப்பதை பழங்குடி மக்களிடம் கற்று கொள்ள வேண்டும்: ஜனாதிபதி முர்மு அறிவுரை

ஷாதோல்: பெருகி வரும் பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதலில் இருந்து காடுகளை பாதுகாப்பது குறித்து பழங்குடியினரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15ம் தேதியை பழங்குடியினர் பெருமை தினமாக கடந்தாண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், இந்தாண்டு பழங்குடியினர் பெருமை தினத்தையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மத்திய பிரதேசத்தில் ஷாதோல் மாவட்டத்தில் லால்பூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ``தற்போது அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதலில் இருந்து காடுகளை எப்படி பாதுகாப்பது என்பதை காடுகளை பாதுகாப்பத்தில் பழங்குடியினரிடம் உள்ள மன உறுதி, வாழ்க்கை முறை ஆகியவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். பழங்குடியினரிடம் பாலியல் சமத்துவம் சிறந்து விளங்குகிறது,‘’ என்று தெரவித்தார்.

Tags : President ,Murmu , Protecting forests should be taught to tribal people: President Murmu advises
× RELATED நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்...