ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணியில் இருந்து பிராவோ உள்பட 8 வீரர்கள் விடுவிப்பு

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பிராவோ உள்ளிட்ட 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் அதிக கவனம் கொண்டுள்ளது.அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் இருந்த விடுவித்த வீரர்கள் குறித்த தகவல்கள் கடந்த 2 நாட்களாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ-வை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் வீரர்களின் புதிய ஏலம் நடைபெறவுள்ளதால் பல்வேறு அணிகளில் பல வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். டிவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன், ஜெகதீசன், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ஆசிப் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

ரவீந்திர ஜடேஜாவை தக்க வைத்து சர்ச்சைக்கு சி.எஸ்.கே. அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது . சி.எஸ்.கே-வின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மகேந்திரசிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டெவோன் கான்வே, ருதுரா உள்ளிட்டோர் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, மகேஷ், பிரசாந்த் சோலங்கி ஆகியோரும் சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது.

Related Stories: