×

குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு: ரப்பர் பால்வெட்டு பாதிப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வரும் நிலையில் ரப்பர் பால்வெட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் பரவலாக மழை காணப்பட்டது. இன்று காலை வரை விடிய விடிய பல இடங்களிலும் மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக கொட்டாரத்தில் 48 மிமீ மழை பெய்திருந்தது.  இதற்கிடையே மாவட்டத்தில் தொடர்ந்து அதிகாலை வேளையில் பெய்து வருகின்ற மழை காரணமாக ரப்பர் பால்வெட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அரசு ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால்வெட்டு பணிகள் முடங்கியுள்ளன.அதன்படி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 41.87 அடியாகும். அணைக்கு 1003 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 233 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.76 அடியாகும். அணைக்கு 386 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 14.89 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது.

அணைக்கு 239 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிற்றார்-2ல் 14.99 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 59 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. பொய்கையில் 17.50 அடியாக நீர்மட்டம் காணப்படுகிறது. அணைக்கு 15 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 46.51 அடியாகும். முக்கடல் அணையின் நீர்மட்டம் 17.30 அடியாகும். அணைக்கு 9.6 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்துவிடப்பட்டிருந்தது.


Tags : Kumari , Continuation of heavy rains across Kumari: Impact on rubber plantation
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...