அமெரிக்க தூதரக வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: ஹைதியில் பரபரப்பு

போர்ட்-ஓ-பிரின்ஸ்: கரீபியன் நாடுகளின் ஒன்றான ஹைதியில் அமெரிக்க தூதரக செயல்பட்டு வருகிறது. தூதரக வாகனங்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீஸ் தகவல் அதிகாரி கேத்ரின் எட்வர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தூதரக கான்வாய் வாகனம் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில், ஹைதியை சேர்ந்த டிரைவர் காயமடைந்தார்.

இருப்பினும், அவரது உயிருக்கு ஆபத்தில்லை. இந்த தாக்குதலை நடத்தியவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு மவோசோ கும்பல் தான் காரணமாக இருக்க முடியும்’ என்றார். தூதரக வாகனம் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

Related Stories: