கம்போடியா பிரதமருக்கு கொரோனா: ஜி-20 மாநாட்டு பயணம் ரத்து

கம்போடியா: கம்போடியா பிரதமருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் ஜி-20 உச்சி மாநாட்டின் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ஆசியான்) தற்போதைய தலைவரான கம்போடிய பிரதமர் ஹன் சென், சமீபத்தில் நடந்து முடிந்த உச்சி மாநாட்டில் தலைமை வகித்தார். இந்த நிலையில் அவர் இந்தோனேசியாவில் இன்றும் நாளையும் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், தனது ஜி-20 உச்சி மாநாட்டின் பயணத்தை ரத்து செய்தார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில், கொரோனா பாதிப்பால் ஜி-20 உச்சி மாநாட்டின் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இவர் ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: