×

சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதிற்கு தமிழ்நாடு அரசு தேர்வு: விருதினை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார் தமிழக நிதியமைச்சர்

சென்னை: “4th TIOL National Taxation Awards 2022” விருது வழங்கும் விழாவில், சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதிற்கு தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக வழங்கப்பட்ட விருதினை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியக்காரன் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.11.2022) தலைமைச் செயலகத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து, புது தில்லியில் 7.11.2022 அன்று நடைபெற்ற “4th TIOL National Taxation Awards 2022” விருது வழங்கும் விழாவில், வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான  விருதிற்கு (Reformist State) தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்காக வழங்கப்பட்ட விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.  

இவ்விழாவில், இந்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, அமெரிக்க கருவூல முன்னாள் செயலாளரும், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவருமான லாரி, எச். சம்மர்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைசார் சாதனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  

முதலமைச்சர் விருது காண்பித்து வாழ்த்துப் பெற்ற நிகழ்வின்போது, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., நிதித்துறை செயலாளர் (செலவினம்) வி. அருண் ராய், இ.ஆ.ப., நிதித்துறை சிறப்புச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu ,Minister of Finance ,Chief Minister , Best reformist state, Tamil Nadu government selection, Tamil Nadu Finance Minister congratulated
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...