சமூக வலைத்தளங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்க முடிவு

சென்னை: சமூக வலைத்தளங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் கட்டுப்பாடு இல்லாமல் செய்யப்படுகின்றன என்றும், பொய் செய்திகள் வன்முறையை தூண்டும் பதிவுகள் பண மோசடிகள் அதிகரித்திருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் அமைக்கப்படும் இந்த தனிப்பிரிவு பணமோசடி, சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் செயல்படும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பதிவுகளை முன்கூட்டியே கண்காணித்து சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதி கெடாத வகையில் சமூக வலைதள கண்காணிப்பு குழு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: