×

இந்திய அணிக்கு எதிரான டி 20, ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து அணி அறிவிப்பு: குப்தில், டிரன்ட் போல்ட்டுக்கு இடமில்லை

வெலிங்டன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்திற்கும் அதைத் தொடர்ந்து வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒரு நாள், டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்காளதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது. முதலில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18 முதல் நவம்பர் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25ல் தொடங்குகிறது. நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோஹ்லி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் டி20 தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் களம் இறங்குகிறது. ஒருநாள் போட்டியில் இந்திய அணியை தவான் வழிநடத்துகிறார். இந்த தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோல் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ரிஷிகேஷ் கனிட்கர், பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பஹுதுலே மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக முனிஷ் பாலி ஆகியோர் லட்சுமணனுக்கு உதவுவார்கள்” என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்திய அணிக்கு எதிராக விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் போல்ட்டுக்கு இடம் இல்லை.

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து டி20 அணி விவரம்:- கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கெல் பிரேஸ்வெல், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, பிளெய்ர் டிக்னெர்.

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து ஒரு நாள் அணி:-
கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லதாம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுத்தி.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி:-
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பன்ட் (துணை கேப்டன்), ஷூப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி:-
ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பன்ட் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.


Tags : T20 ,New Zealand ,India ,Gupta ,Trent Boult , New Zealand squad announced for T20I, ODI series against India: Guptill, Trent Boult out
× RELATED உலக கோப்பை டி20 நியூசி. அணி அறிவிப்பு