குழந்தைகள் தினத்தன்று நடந்து சென்ற மாணவர்களை காரில் அழைத்து சென்ற அமைச்சர்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

காரைக்கால்: புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா காரைக்கால் அடுத்த நெடுங்காட்டில் உள்ள தனது வீட்டிலிருந்து நேற்று காலை அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சில பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து செல்வதை கண்ட அவர், பள்ளி மாணவர்களை தனது காரில் ஏற்றி கொண்டு சென்றார். அப்போது சிறுவர்கள் காரில் பாட்டு இல்லையா என்று கேட்டு விட்டு, அவர்களே பாட்டு பாடி வந்தனர்.

இதனை கண்ட சந்திர பிரியங்கா அவரது செல்போனில் செல்பி வீடியோ எடுத்துள்ளார். இது கண்ட சிறுவர்கள் பாட்டு பாடுவதை நிறுத்தி உள்ளனர். உடனே சந்திர பிரியங்கா ``டேய் வெட்கப்படாதீங்கடா... பாடுங்கடா’’ என்று சொல்லியவாறு அந்த சிறுவர்களை பள்ளியில் இறக்கி விட்டு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். வழியில் மாணவர்களுடன் அமைச்சர் பேசி வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: