தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சென்னை மாநகர போலீசார் சோதனை

சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகாமை அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதவாக இருந்த 18 பேர் சென்னையில் இருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தமிழக காவல்துறைக்கு அனுப்பியது. அதன்படி கடந்த 10-ம் தேதி 4 பேரின் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இன்று மீண்டும் 4 இடங்களில் சோதனை நடைபெற்றது. கொடுங்களூரில் முகமது தப்ரஸ், ஏழுகிணறு பகுதியில் தௌபிக் அகமது, மண்ணடியில் ஷாருக் ரசீர், வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவில் முகமது முஸ்தபா ஆகியோரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரிக்கப்பட்டது.

Related Stories: