ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.39,520க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.39,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.4,940க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் அதிகரித்து ரூ.68.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை  கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு, 143 ரூபாய் அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.1,144 அதிகரித்தது.  இந்நிலையில் இந்த வாரம் தொடங்கி இரு நாட்களில் சவரனுக்கு ரூ.384 உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.39,208-க்கு விற்கப்பட்டது.

கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூ.4,901-க்கு விற்கப்பட்டது. இதேபோல் நேற்று வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.67.70-க்கு விற்கப்பட்டது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.67,700-க்கு விற்பனையானது.  இந்நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.39,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.4,940க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் அதிகரித்து ரூ.68.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி 68,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: