×

தமிழ்நாடு முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்து 525 நூலகங்கள் செயல்படுகின்றன. இந்த நூலகங்களை புதுப்பிக்கும் அறிவிப்பை ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் கடந்த ஆண்டு சட்டசபையில் வெளியிட்டார்.

முதல் கட்டமாக 2021-22ம் ஆண்டில் 4,116 நூலகங்களை புதுப்பிக்க ரூ.91.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 3,808 நூலகங்களை புதுப்பிக்க ரூ.84.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நூலகங்கள் 2024ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu , Promulgation of an ordinance allocating Rs.84 crore to renovate 3,808 libraries across Tamil Nadu
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...